பி. முஹாஜிரீன்

பொத்துவில் அல் அக்ஸா வித்தியாலயத்தில் வேல்ட் விசன் நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூபா 3 இலட்சம் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட விஞ்ஞான ஆய்வு கூடம்நேற்று  (16) வியாழக்கிழமை வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதிபர் ஏ.எம். றகுமத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் எம் .எஸ். உதுமாலெவ்வை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வைபவ ரீதியாக ஆய்வு  கூடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.ஏ. வாஸித்இ பிரதேச செயலாளர் எம்.என்.எம். முஸர்ரப், பிரதேச சபை உறுப்பினர் ஏ. பதுர்க்கான் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு 5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதோடு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வையும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

கருத்துரையிடுக

 
Top