திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் 52 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மருதமுனை அல்-ஹிக்மா கனிஷ்ட பாடசாலைக்கு மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கும், கழிவறைத் தொகுதிக்கும் அடிக்கல் நடும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எல்.எம்.மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.அப்துல் ஜலீல் விசேட அதிதியாகவும், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், எம்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர் அலி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக

 
Top