நாடு பூராவும் இன்று (20) சுபநேரமான 10.07 மணிக்கு ஆரம்பமான திவிநெகும தேசிய  திட்டத்தின் கல்முனை பிராந்திய  வேலை திட்டம் கல்முனை  பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிரீன் பீல்ட் றோயல் வித்தியாலயத்தில்  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எம்.சர்ஜூன்  தலைமையில்   நடைபெற்றது.
இன்று  நாடு பூராகவூமுள்ள 14,022 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளில் வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் ஆறாம் கட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்து

இதன் போது, குடும்ப பொருளாதார மற்றும் போஷாக்கை மேம்படுத்துவதற்கான 25 இலட்சம்  மனைப்பொருளாதார அலகுகளை வலுவூட்டும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், பலன் தரும் மரக்கண்டுகள், பழமரக்கண்றுகள்  வழங்கப்பட்டன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் செயற்படுத்தப்பட்டுவரும் நிறைவான இல்லம் வளமான தாயகம் என்ற தொனிப்பொருளில் திவிநெகும திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில்  கல்முனை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ.மோகன குமார் பிரதம அதிதியாகவும் , திவிநெகும பிரதேச அதிகாரி  ஏ.ஆர்.சாலிஹ் , கிராம சேவகர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.எச்.ஏ.லாஹிர்  உட்பட  அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதே வேளை கல்முனைகுடி  திவிநெகும  வங்கி முகாமையாளர் சதீஸ் குமார் தலைமையில் வங்கியில் வைத்து மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன 

குறிப்பாக இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகவும் ,கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப் பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் , பிரதேச செயலாளர் ஏ.மங்கள விக்ரமாராட்சி  ஆகிய இருவரும் கலந்து கொள்ளவில்லை 

இதே வேளை நற்பிட்டிமுனை 02 ஆம்பிரிவு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்  எம்.எஸ்.எம்.றியாஸ் ஏற்பாடு செய்த நிகழ்வு  சட்டத்தரணி  எம்.ஐ.அஸீஸின் வீட்டுத்தோட்டத்தில் நடைபெற்றது்
இதில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எல்.ஸாலிஹூதீன்    க ல்முனை பிரதேச செயலக திட்டமிடல் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியொகத்தர் ஏ.பி.எம்.அஸ்ஹர் சட்டத்தரணி எம்.ஐ.அஸீஸ் திவிநெகுமஅபிருத்தி உத்தியோகத்தர் எம்.ஜெமில் கிராம உத்தியோகத்தர்எம்.எஸ்.மஸூனா உட்பட பலர் கலந்து கொண்டனர்இதேவேளை நற்பிட்டிமுனை 03ஆம் பிரிவுக்கான  வேலைத்திட்டம் திவிநெகும  அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.ரோசினி தலைமையில் இடம் பெற்றபோது  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்  உட்பட அதிகாரிகளும் ,பயனாளிகளும் கலந்து கொண்டனர் 

கருத்துரையிடுக

 
Top