கல்முனை பிரதேசத்தை சேர்ந்த  சேனைக்குடியிருப்பு , பெரிய நீலாவணை ,நற்பிட்டிமுனை  நன்னீர்  மீன்பிடியாளர்களுக்கு  பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் 325,000 ரூபாய் நிதியொதுக்கீட்டின் மூலம் மீன்பிடி உபகரணங்கள் திங்கட்கிழமை(20) கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.

கல்முனை பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான பி.எச்.பியசேன,  உதவிதிட்டமிடல் பணிப்பாளர் பீ.இராஜகுலந்திரன், திவிநெகும  தலைமைப்பீட முகாமையாளர் எம்.சிவம் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்முனை பிரதேசத்தை சேர்ந்த  சேனைக்குடியிருப்பு , பெரிய நீலாவணை ,நற்பிட்டிமுனை  கிராமங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் 10 நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களுக்கு அவர்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்தும் வகையில் மீன்பிடி வலைகள், தோணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கருத்துரையிடுக

 
Top