இலங்கை பரீட்சை திணைக்களத்தின் தேசிய மதிப்பீட்டிற்கும் பரீட்சித்தலுக்குமான சேவை பிரிவினால்  70 புள்ளிக்கு மேல் பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் மாணவர்களுக்கு MAN.புஸ்பகுமாரவினால்  தரம் 5 புலமைப் பரிசில்  பரீட்சைச் சான்றிதழ் வழங்கப் பட்டுள்ளன.

இதன் அடிப்படையில்  அண்மையில் வெளியான தரம் 5 புலமைப் பரிசில்  பரீட்சைக்கு தோற்றி  ஒவ்வொரு வினாப்பத்திரத்துக்கும் 35 புள்ளிகளையோ அதற்கு கூடுதலாகவோ  பெற்று பரீட்சையில் மொத்தமாக  70 புள்ளிகளையோ அதற்கும் அதிகமாகவோ  அடைந்து சித்தி பெற்றமைக்காக  கல்வி அமைச்சினால் இந்த தரம் 5 புலமைப் பரிசில்  பரீட்சைச் சான்றிதழ் வழங்கப் படுகின்றது.

கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட  கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாட சாலை மாணவர்களுக்கு   தரம் 5 புலமைப் பரிசில்  பரீட்சைச் சான்றிதழ் வழங்கும் விழா  பாட சாலையில் நடை பெற்றது 

கல்லூரி முதல்வர் அருட் சகோதரர் ஸ்டீபன்  மத்தியூ தலைமையில் இன்று  நடை பெற்ற வைபவத்தில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் M.Sஅப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு  மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.கருத்துரையிடுக

 
Top