சமீபத்தில் வெளியான 5ஆம் தர புலமைப் பரீட்சையில் நற்பிட்டிமுனை கிராமத்தில்  சித்தியடைந்த  03 மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நாளை நட்பிட்டிமுனையில் இடம் பெறவுள்ளது 

நற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர்  மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்  நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் பாடசாலையின் பழைய மாணவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சா  றிசாட் பதியூதீனின்  கல்முனை  தொகுதி இணைப்பாளரும், அல்-கரீம் நெசவாளர்  மற்றும் கைத்தொழில் சமூக சேவைகள் அமைப்பின் தலைவருமான சீ.எம்.ஹலீம் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக  அல்-அக்ஸா மகா வித்தியாலய அதிபர்  எம்.எல்.ஏ.கையூம்,  கல்முனை மாநகர சபை உறுப்பினர்  சீ.எம்.முபீத், கல்முனை மாநகர  பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்  எம்.சீ.எம்.மாஹிர் , பள்ளிவாசல் பரிபாலன சபை தலைவர்  மௌலவி ஏ.எல்.நாஸீர்கனி உட்பட பலர்  கலந்து சிறப்பிக்க வுள்ளனர் 

இதன்போது புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கும் , கற்பித்த ஆசிரியர்களுக்கும் பணப்பரிசு, நினைவுச்  சின்னம் மற்றும் பரிசுப்பொதிகளும் வழங்கி கௌரவிக்கப்படவு ள்ளதாக  அமைப்பின் செயலாளரும் அல்-அக்ஸா மகா வித்தியாலய பழைய மாணவருமான யூ,.எல்.எம்.பாயிஸ் தெரிவித்தார் 
    

கருத்துரையிடுக

 
Top