அனுராதபுரத்தில் நடைபெற்றுவரும் இலங்கையின் 40வது தேசிய விளையாட்டுப்போட்டியின் மென்பந்து (Soft Ball) கிரிக்கெட்துறையில் அகில இலங்கை ரீதியில் சிறந்த வீரராக நிந்தவூரைச் சேர்ந்த நிக்சி அஹமட் விளையாட்டு அமைச்சினால் நேற்று  (27.10.2014) 10,000.00 ரூபா பணப்பரிசும், ஞாபகச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அனுராதபுர விளையாட்டுத்தினைக்களத்தின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவரும் மேற்படி போட்டிகளின் கிரிகெட் போட்டிகளுக்கான இறுதிநாள் நிகழ்வின் பரிசளிப்பிலேயே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஏ.எல்.அனஸ் அஹமட் எமது செய்திச்சேவைக்குத் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

 
Top