நோன்பு பெருநாளை முன்னிட்டு நற்பிட்டிமுனை மென்ஸ் சமுக சேவை அமைப்பு ஏற்பாடு செய்த சேர்மன் எல்.உதுமாலெவ்வை சம்பியன் வெற்றிக்கேடய மென் பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியில் நற்பிட்டிமுனை மென்ஸ் கழகம் சம்பியனாக வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நற்பிட்டிமுனை கிராமத்தின் சமுக முன்னோடி மர்ஹூம் லெவ்வைக் கனி உதுமாலெவ்வை நினைவாக நடாத்தப்பட்ட மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நோன்பு பெருநாளை முன்னிட்டு   நற்பிட்டிமுனை தலைவர் அஸ்ரப் விளையாட்டு மைதானத்தில் மென்ஸ் சமுகசேவை அமைப்பின் தலைவர் ஏ.எச்.எச்.எம். நபார் தலைமையில் நடை பெற்றது. 

இறுதிச் சுற்றுக்கு தெரிவாகிய நற்பிட்டிமுனை ஹீரோ விளையாட்டுக் கழகத்துக்கும்  மென்ஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையே நடை பெற்ற போட்டியில்  ஹீரோ விளையாட்டுக் கழகம் 10ஓவரில் சகல விக்கட்டுக்களையூம் இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றது. எதிர்த்து விளையாடிய மென்ஸ் விளையாட்டுக் கழகம் இரண்டு விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 95 ஓட்டங்களைப் பெற்று சேர்மன் எல்.உதுமாலெவ்வை சம்பியன் வெற்றிக்கேடயத்தை பெற்றுக் கொண்டது.


இந்த விளையாட்டுப் போட்டியில் திகாமடுள்ள மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகவூம் இ இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபன தமிழ் செய்திப் பிரிவூ பணிப்பளர் சீ.பீ.எம். ஸியாம் இடாக்டர் ஐ.எல்.மலிக் இஸ்மாயில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்.ஏ.எச்எச்.எம்.நபார் இஉகன உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஸீக் ஆகியோர் விசேட அதிதிகளாகவூம் மற்றும் பலர் கௌரவ அதிதிகளாகவூம் இவிசேட அதிதிகளாகவூம் கலந்து சிறப்பித்தனர்.

ஓய்வூ பெற்ற மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபாஇகூட்டுறவூச் சங்க முகாமையாளர் எம்.ஐ.எம். நூர் முகம்மட் ஆகியோர் மர்ஹூம் சேர்மன் எல்.உதுமாலெவ்வையின் ஆளுமை பற்றி உரை நிகழ்தினர். 
நற்பிட்டிமுனை தலைவர் அஸ்ரப் விளையாட்டு மைதானத்தில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்து தருவதாக அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பியசேன அங்கு தெரிவித்தார்.


கருத்துரையிடுக

 
Top