இருதய நோய் காரணமாக தற்பொழுது கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் சிரேஷ்ட ஊடகவியலாளரும், அம்பாறை மாவத்தில் மூத்த ஊடகவியலாளருமான கலாபூசணம் ஏ.எல்.எம். சலீம் அவர்கள் குணமடைய றஹ்மத் நிறைந்த றமழான் மாதத்தில் பிரார்த்திப்போம் என கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஸ்ரீ .ல.மு.கா. மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் விடுத்த விசேட அறிக்கையில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றாப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இன்று தொலைபேசியினூடாக அவரை தொடர்பு கொண்டபோது தற்பொழுது ஓரளவு நலமடைந்து வருவதாகவும் இன்னும் ஐந்து தினங்களுக்கு கொழும்பில் தங்கியிருந்து வைத்திய ஆலோசனையின் பின்னர் நிந்தவூருக்கு வரலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான அல்ஹாஜ் ரஊப் ஹக்கீம் மற்றும் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் முழக்கம் மஜீட் உள்ளிட்டோர் தன்னை பார்வையிட வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எமது கல்முனை மாநகர சபை அமர்வின்போது கிரமமாக அங்கு வந்து செய்திகளை சேகரிக்கும் ஊடகவியலாளர்களின் சலீம் அவர்கள் சிறப்புமிக்கவராக திகழ்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது மூத்த ஊடகவியலாளரான கலாபூசணம் ஏ.எல்.எம். சலீம் அவர்கள் விரைவில் குணமடைய கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் சார்பிலும், அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் சார்பிலும் இறைவனை பிரார்த்திப்போமாக.

கருத்துரையிடுக

 
Top