ஏ.பி.எம்.அஸ்ஹர்இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய அலுவலகமும் மனித அபிவிருத்தி தாபனமும் இணைந்து ஏற்பாடு செய்த சித்திரவதைக்கெதிரான சர்வதேச தினம் தொடர்பான செயலமர்வொன்று இன்று கல்முனையில் நடைபெற்றது.


கிரிஸ்டா இல்லத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய உத்தியோகத்தர் டாக்டர்எம்.எம்.ஏ.ரஹ்மான் வளவாளராகக்கலந்து கொண்டார். இதில் பொலிஸ் உத்தியோகத்தர்கள்.சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்.அரச அதிகாரிகள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

 
Top