இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கும் பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த விழாவில் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகௌடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு நரேந்திரமோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

 
Top