யு.எம்.இஸ்ஹாக்
கல்முனை மாநகர சபை உருவாக்கப்பட்டது தொடக்கம் நீண்ட காலமாக வெற்றிடமாக இருந்து வந்த இம்மாநகர சபைக்கான பிரதம சுகாதார வைத்திய அதிகாரி பதவிக்கு, முதல்வர் நிசாம் காரியப்பர் எடுத்துக் கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக முதன் முறையாக டாக்டர் ஒருவர் நிரந்தர நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிற செய்தி தவறானதாகும் .
கல்முனை மாநகர சபையின் முதல்வராக இருந்த  தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்   எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களது காலத்தில்  முதல் தடவையாக மாநகர சபைக்கான பிரதம சுகாதார வைத்திய அதிகாரி பதவிக்கு டாக்டர் ஹபீபுல் இலாஹி  நியமிக்கப் பட்டமை யாவரும் அறிந்த விடயம்  இது இவ்வாறிருக்க முதல்வர் நிசாம் காரியப்பர் எடுத்துக் கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக முதன் முறையாக டாக்டர் ஒருவர் நிரந்தர நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிற செய்தி தவறானதாகும் .
இந்த செய்தியை பிரசுரிக்கும் முன்னர் செய்தியாளர் கல்முனை மாநகர சபையின்  ஆணையாளர் அல்லது நிருவாக உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு உறுதிப் படுத்தி இருக்க வேண்டும்

கருத்துரையிடுக

 
Top