“மதுவற்ற கிராம வாழ்க்கை” எனும் கருப் பொருளைக் கொண்டதான மது ஒழிப்பு விழிப்புணர்வூ ஊர்வலமும் விழிப்பூட்டல் நிகழ்வூம் இன்று 25.01.2014 நற்பி;ட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலய ஆராதனை மண்டபத்தில் இடம் பெற்றது.

கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார் தலைமையில்  இடம் பெற்ற நிகழ்வில் நற்பிட்டிமுனை சிவசக்தி மகா வித்தியாலயம்இ அல்-அக்ஸா மகா வித்தியாலயம் மற்றும் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் இணைந்து  மது ஒழிப்பு தொடர்பான பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நற்பிட்டிமுனை சந்தியில் இருந்து ஊர்வலமாக மண்டபத்தை சென்றடைந்தனர்.

 

இந்த விழிப்புணர்வூ ஊர்வலத்தில் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார் உட்பட கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கணேஸ்வரன்இஉதவிக் கல்விப் பணிப்பளர் கே.வரதராஜன்இ அல்-அக்ஸா மகாவித்தியாலய அதிபர் எம்.எல்.ஏ.கையூம் உட்பட ஆசிரயர்கள்.பெற்றௌர் பொலிஸார் என பல தரப்பட்டோர கலந்து கொண்டனர்.

 

ஊர்வலத்தில் மாணவர்களால் ஏந்திச் செல்லப்பட் மது ஒழிப்பு சிறந்த மூன்று  வாசகங்கள் அடங்கிய  பதாகைக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. முதலாமிடத்தை நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி எம்.எல்.றிப்னாவூம்இ இரண்டாமிடத்தை நற்பிட்டிமுனை சிவசக்தி மகா வித்தியாலய மாணவன் பீ.வஜிதன் மூன்றாமிடத்தை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலய மாணவி சஜிதா பர்வீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 

கருத்துரையிடுக

 
Top