யு.எம்.இஸ்ஹாக்
சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர்  கடமைகளை  தற்காலிகமாக கவனிக்கும் பொருட்டு  கல்முனை வலயத்தில் கடமையாற்றும்  இலங்கை அதிபர் சேவை தரம்  01ஐ சேர்ந்தவர்களிடமிருந்து  விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண  கல்வி, பண்பாட்டலுவல்கள் ,காணி ,காணி அபிவிருத்தி  போக்குவரத்து  அமைச்சின் செயலாளரினால்  விடுக்கப் பட்டிருக்கும் அறிவுறுத்தலுக்கமைய  கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜெலீலினால்  இந்த அறிவித்தல் வழங்கப் பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் பொருத்தமான அதிபர்கள் தங்களது விண்ணப்பத்தை 2014.02.05 ஆந்  திகதிக்கு  முன்னர்  பதிவு தபாலில் அனுப்பி வைக்குமாறு  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரினால்  கேட்கப் பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top