தேசிய காங்கிரஸின் ஆளுகையின் கீழ் உள்ள அக்கரைப்பற்று மாநகர சபையின் 2014ஆம் ஆண்டுக்குரிய பஜ்ஜெட் அதிகப்படியான உறுப்பினர்களின் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று(24.12.2013) காலை மேயர் அஹமட் ஸக்கி அதாவுல்லாவின் தலைமையில் கூடிய மாநகர சபை அமர்வின்போது; 2014ஆம் ஆண்டுக்குரிய பஜ்ஜெட் அறிக்கை வாசிக்கப்பட்டு அது வாக்கெடுப்பக்கு விடப்பட்டது. இதற்கு தேசிய காங்கிரஸின் ஏழு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தன் மூலம் பஜஜெட் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஒரேயொரு எதிர்கட்சி உறுப்பினரான முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த மௌலவி ஹனிபா மதனி சபைக்கு இன்று வருகை தராமை  குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமோக ஆதரவுடன் அக்கரைப்பற்று மாநகர சபையின் 2014ஆம் ஆண்டுக்குரிய பஜ்ஜெட் நிறைவேற்றப்பட்டது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மேயர் ஸக்கி அதாவுல்லா, 'மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு மகாநகர சபைக்குட்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் எவ்வித வேறுபாடுகளுமின்றி நடைபெறுகிறது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாநகர உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களித்த மக்களின் நலன்களில் அக்கறைகாட்டி வருகிறார்கள். அவர்களின் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்கு என்னாலான சகல ஒத்துழைப்புக்களும் வழங்கப்பட்டு வருகிறது.
அது மாத்திரமின்றி, அக்கரைப்பற்று மகாநகரின் அபிவிருத்தி தொடர்பில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும், உதவியும் இன்றியமையாதது என்று தெரிவித்த மேயர் ஸக்கி அதாவுல்லா ஆதரவாக வாக்களித்த தேசிய காங்கிரஸின் சகல உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.


கருத்துரையிடுக

 
Top