சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு சொந்தமான மீன் வாடியொன்றும் டிப்பர் வாகனமொன்றும் நேற்று (25) நள்ளிரவு இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

மீன் வாடிக்கு சொந்தக்காரரான பீ.எம்.அலியார் (றாசிக்) சுகவீனமற்ற நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்தீச் சம்பவத்தினால் மீன் வாடி முழுமையாக தீக்கிரையாகியுள்ளதுடன் டிப்பர் வாகனம் அந்த தீக்குள் தள்ளியும் விடப்பட்டுள்ளதாக அங்கு கூடியிருந்த மீனவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் மீன்வாடியினுள் வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடிப் படகின் இயந்திரங்கள், குளிரூட்டிகள் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்களும் தீக்கிரையாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு கருத்துரையிடுக

 
Top