இடம்பெற்று முடிந்த மூன்று மாகாணங்களுக்கான முதலமைச்சர் நியமனங்கள், போனஸ் உறுப்பினர்கள் தொடர்பாகவும் விசேடமாக கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பது தொடர்பாகவும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்று நீண்ட நேரம் அலரி மாளிகையில் கூடி ஆராய்ந்துள்ளது.
இட ம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் அமை ச்சர்களான பஷில் ராஜபக்ஷ, டலஸ் அழகப்பெரும, சுசில் பிரேம்ஜயந்த, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர் . கிழக்கு மாகாண முதலமைச்சரை தெரிவு செய்வதற்கு அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, சுசில் பிரேம ஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோரை உள்ளடக்கி குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
மேற்படி முதலமைச்சர்களை தெரிவுசெய்ய நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் கிழக்கு முதலமைச்சர் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் , அகில இலங்கை மக்கள் காங்கிரசும் தத்தமது கட்சி சார்பான நபர்களின் பெயர்களை வழங்கியுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவிக்கு ஹாபீஸ் நஸீரை சிபாரிசு செய்துள்ளது. அதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அமீர் அலியையும் சிபாரிசு செய்துள்ளதுடன் அமைச்சர் அதாவுல்லாவும் அமீர் அலியை நியமிக்க அமைச்சர் றிஷாத்துடன் இணைந்து கோரிக்கை முன்வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
நேற்று அலரி மாளிகையில் இட ம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் வடமத்திய மாகாண சபையில் யாரை முதலமைச்சராக நியமிப்பது ௭ன்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமை தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இன்று வெள்ளிகிழமை சந்தித்து பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றுவரை அமைச்சர் ஹக்கீம் தமிழ் தேசிய கூட்டமைப்பின்   தலைவர் இரா சம்பந்தனை சந்திக்க வில்லை என்று அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .

கருத்துரையிடுக

 
Top