கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை அமைப்பதற்கு எந்த தரப்புடன் இணைந்து கொள்வது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டம் தீர்மானம் எதுவுமின்றி கலைந்துள்ளது..
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி தொடக்கம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்று இக்கூட்டம் இன்று மாலை ஏழு மணியளவில் முடிவுக்கு வந்துள்ளது.
நாளை காலை மீண்டும் ஒரு கலந்துரையாடல் இடம்பெறும் என்று அறிவிக்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் கட்சியின் தவிசாளர், செயலாளர் நாயகம் உட்பட எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஏழு உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான நிசாம் காரியப்பர் ஆகியோருடன் எஸ்.எச்.ஆதம்பாவா உட்பட உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top