கிழக்கு மாகாணசபையின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபை தேர்தலில் இரண்டு போனஸ் ஆசனங்கள் உட்பட அதிகூடிய 14 ஆசங்களை  ஐக்கிய மக்கள் சுதந்திரக்  கூட்டணி பெற்றுள்ளது.
அம்பாறை- மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இம்மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதேவேளை- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

           மொத்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்  கூட்டமைப்பு  200044 வாக்குகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 193827 வாக்குகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 132917 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 74901 வாக்குகளையும் தேசிய சுதந்திர முன்னணி 9522 வாக்குகளையும் பெற்றுள்ளது

கருத்துரையிடுக

 
Top