வர்த்தகர் சங்கம் அறிக்கை 


“கல்முனையில் சாப்புச் சட்டத்தினைநடைமுறைப்படுத்தும் விடயத்தில் முஸ்லிம்களுக்குவெள்ளிக்கிழமையும்,தமிழர்களுக்குஞாயிற்றுக் கிழமையும் எனதீர்மானித்திருப்பது இரு சமுகங்களைதொடர்ந்தும் பிரித்துவைப்பதற்குஏதுவாகஇருப்பதுடன் இன ஐக்கியத்திற்கும் ஊறுவிளைவிப்பதாகவும் உள்ளது.”எனகல்முனைவர்த்தகசம்மேளனம் விடுத்துள்ளஊடகஅறிக்கையில் தெரிவித்துள்ளது.

“மேற்படிவிடயம் தொடர்பாககல்முனைவர்த்தகசம்மேளனத்தின் சார்பில் அதன் தலைவர் எஸ்.எம்.ஏ. கரீம்,தவிசாளர் யூ.எல்.எம். பஸீர் ஆகியோர் கையெழுத்திட்டுவெளியிட்டுள்ளஅறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

கல்முனைமாநகரில் வர்த்தகம் புரிந்துவந்தசகலவர்த்தகர்களும் பன்னெடுங்காலமாககல்முனைப் பகுதியின் நிலைமையைப் புரிந்துஒற்றுமையைப் பேணிப் பாதுகாத்துவெள்ளிக்கிழமையினைவிடுமுறைதினமாகஏற்றுசாப்புச்சட்டஒழுங்குவிதிகளைநன்குமதித்துசெயற்பட்டுவந்துள்ளனர். விடயம் இவ்வாறிருக்கஒருசிலவர்த்தகர்களின் தனிப்பட்டவேண்டுகோளைநிறைவேற்றுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமைதமிழ் தேசிய கூட்டமைப்புடன் துணைபோயிருப்பதுமிகவும் வேதனைக்குரியதும் வன்மையாககண்டிக்கப்படவேண்டியவிடயமுமாகும்.

சாப்புச்சட்டத்தினைநடைமுறைப்படுத்துகின்றவிடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்குமு.கா. தலைமையும்,த.தே.கூ. தலைமையும் தமிழ் வர்த்தகர்களுடன் கலந்துரையாடியவேளை முஸ்லிம் வர்த்தகர்கள் அழைக்கப்படாமையானதுதேர்தல் காலங்களில் முஸ்லிம்களின் தலைநகரம் எனநாமம் சூட்டப்பட்டபட்டினத்தின் முஸ்லிம் வர்த்தகர்கள் அழைக்கப்படாமல் மேற்படிதீர்மானம் எடுக்கப்பட்டதுஎந்தவகையில் நியாயமாகும்.

நீண்டகாலமாககல்முனைவர்த்தகசம்மேளனம்,கல்முனைவர்த்தகசங்கம்,ஐக்கியவணிகர் அமைப்பு (தமிழ் வர்த்தகர் சங்கம்),சாய்ந்தமருது,மருதமுனைவர்த்தகசங்கங்களின் தலைவர்,செயலாளர்களைஉள்ளடக்கியதாககல்முனைமாநகரசபையில்செயற்பட்டுவரும் அரசதனியார் செயற்குழு கூட்டத்தில் பலவருடங்களாகமுன்வைக்கப்பட்டகோரிக்கையின் நிமித்தமேஅரசாங்கவிதிகள்,நிதிநடைமுறைகளைப் பேணியதாக 19 கடைகளிற்கும் திறந்தகேள்விப்பத்திரம் கோரப்பட்டுஆகக்கூடியகேள்வித் தொகைசமர்ப்பித்தவர்களுக்குகடைகளைவழங்குவதற்குகேள்விச் சபை தீர்மானித்துஉறுப்பினர்களின்மாதாந்த சபை அமர்வின் போதுஉறுதிப்படுத்தப்பட்டுதிறப்புகள் கையளிப்பதற்குநடவடிக்கைஎடுக்கப்பட்ட இறுதிநேரத்தில் தீர்மானத்தினைகைவிடக்கோரியிருப்பதுஎந்தவகையில் நியாயமாகும். பகிரங்கமாகதினசரிப் பத்திரிகையிலும்,விளம்பரப் பலகைகளிலும் விளம்பரப்படுத்தப்பட்டபோதுதீர்மானத்தைமாற்றுமாறுகோரிக்கைவிடுத்தவர்கள் எங்கிருந்தார்கள்?

தமிழ்களுக்கு 05 கடைகளும் முஸ்லிம்களுக்குமிகுதிகடைகளும் வழங்கப்படவேண்டும் என்றதீர்மானத்தினைமு.கா.,த.தே.கூ. தலைமைகள் கையெழுத்திட்டுமாநகரசபைக்குஎழுத்து மூலம் வழங்குவார்களா? இவ்வாறுகல்முனையில் மாத்திரம் இன ரீதியாகநோக்கப்படுகின்றஅதேவேளைமட்டக்களப்பு,திருகோணமலை,யாழ்ப்பாணம்,வவுனியா,மன்னார் போன்றநகரங்களில் முஸ்லிம்களின் பங்குகள்என்னஎன்பதுதொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடுஎதுஎன்பதைதெளிவுபடுத்துமா?அதேபோன்றுமு.கா. தலைவர்,கல்முனைக்குவெளியில் கூட்டமைப்புடன் பேசி முஸ்லிம்களின் இன விகிதாசாரத்தைஉறுதிப்படுத்துவாரா? மேற்படிவிடயங்களில் இரண்டுகட்சித் தலைவர்களும் தீர்க்கதரிசனமானதும்,தீர்க்கமானதுமானமுடிவினைஎடுக்கவேண்டும் எனவர்த்தகசம்மேளனம் பெரிதும் விரும்புகின்றது.

மிகவும் நீண்டகாலமாகஎதிர்பார்க்கப்பட்டகல்முனைமாநகரஅபிவிருத்தித் திட்டமானது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் மரணத்தோடுஎதுவிதமுன்னெடுப்புக்களுமின்றிகிடப்பில் கிடப்பதானது முஸ்லிம்களின் வர்த்தகதலைநகரும்,தென்கிழக்கின் முகவெற்றிலையுமானகல்முனையினைவேண்டுமென்றேதிட்டமிட்டுபுறக்கணிக்கும் செயலாகவேஎமதுசம்மேளனம் பார்க்கின்றது. முன்னாள் பிரதிஅமைச்சர் மயோன் முஸ்தபாநகரஅபிவிருத்திஅதிகாரசபையுடன் இணைந்துகல்முனைமாநகருக்கானஅபிவிருத்தித் திட்டத்தினைதயார் செய்தபோதுஅதனைஅப்போதுதடுத்துநிறுத்தியவர்களும் இதேதமிழ் கூட்டமைப்பினர் என்பதனைநாம் மறந்துவிடவில்லை.

கிழக்கில் முக்கியநகரங்களானதிருகோணமலை,மட்டக்களப்பு,காத்தான்குடி,அக்கரைப்பற்று,அம்பாரைஎனஅனைத்துநகரங்களுமேஅவ்வப்பிரதேசஅரசியல் வாதிகளால் திட்டமிடப்பட்டுஅபிவிருத்திசெய்யப்படுகின்றபொழுதுஅபிவிருத்திக்காகநீண்டகாலமாகஏங்கும் கல்முனைநகர் மாத்திரம் ஏன் புறக்கணிக்கப்படகின்றது. கல்முனைநகரஅபிவிருத்திக்காகமு.கா. தலைமைஇதுவரைஎடுத்துள்ளநடவடிக்கைகள்தான் என்ன?

கல்முனைக்குகிழக்குமாகாணஆளுனரின் வருகையின் மூலம் சுமார் 350 மில்லியனுக்குமேற்பட்டதொகையிலானஅபிவிருத்திகளைபெறக்கூடியசந்தர்ப்பம் இருந்தும் அரசியல் குத்துவெட்டுக் காரணமாகஅதனைதடுத்திருப்பதானதுகல்முனையின் அபிவிருத்தியைமேலும் பின்கொண்டுசெல்லவேவழிவகுத்துள்ளது. எனவே இது விடயத்தில் இனிவரும் காலங்களிலாவதுபொருத்தமானமுடிவுகளைஎடுக்கசம்பந்தப்பட்டஅனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டும்” இவ்வாறுகல்முனைவர்த்தகசம்மேளனம் தனதுஅறிக்கையில் தெரிவித்துள்ளது.
கருத்துரையிடுக

 
Top