சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் அப்துல் றஹீம் றஷாத் அஹமட் எதிர்வரும் 2012.01.24 அன்று உம்றா கடமையை நிறைவேற்ற புனித மக்கமா நகர் செல்லவுள்ளார். இவர் சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலய அதிபர் எம்.ஏ.அப்துல் றஹீம், ஆசிரியை எம்.ஏ.றாஷிதா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வர் ஆவார்.

இவர் 2010ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 9 ஏ பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளார். இதனை கௌரவிக்கும் முகமாக 2011.12.11ல் கொழும்பு ஸாஹிறா கல்லூரியின்
அப்துல் கபூர் மண்டபத்தில்  எம்.ஈ.பி.எஸ். அமைப்பினரால் நடாத்தப்பட்ட பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு சான்றிதழ்கள், பரிசில்கள், பாராட்டுக்களை பெற்றதோடு புனித உம்றா கடமையை நிறைவேற்றுவதற்கான ஏழு நாள் இலவச பிரயாண டிக்கட்டையும் பெற்றுக்கொண்டார்.


மேலும், இலங்கையில் இருந்து இவ்விலவச உம்றா பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பினை ஆறு மாணவர்கள் பெற்றதோடு எமது பிரதேசத்தில் இவருக்கு மட்டுமே இவ்வாய்ப்பு கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துரையிடுக

 
Top