அகில இலங்கை பாடசாலை கால்பந்தாட்ட சங்கம் நடாத்திய 19 வயதுக்குட்பட்ட மானவர்களுக்கிடையான 1ஆம் 2ஆம் 3ஆம் பிரிவுகளுக்கான இறுதிப் போட்டியும் பரிசளிப்பு வைபவமும் நேற்று திங்கட்கிழமை கல்முனை சாஹிராக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான இசட்.ஏ.எச்.ரஹ்மான் உட்பட பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் நீர்கொழும்பு சென்மேரிஸ் கல்லூரி சம்பியனாகத் தெரிவானது.

இதன் ஆரம்ப நிகழ்வில் களமுனை மாநகர முதல்வர் சிராஸ் மீரா சாஹிப்,நாடாளுமன்ற உறுப்பினர்  எச்.எம்.எம்.ஹரீஸ்  ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

 
Top