இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த நிலையத்தில் நடைபெற்றுவரும் நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்  இத்தகவலை வெளியிட்டார்.
இலங்கையர்கள் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். அது தொடர்பான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் 2012 ஆம் ஆண்டில் நாம் முன்னெடுக்கவுள்ளோம்.
அந்த செயற்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை வரவுள்ளார் என அமைச்சர் அங்கு தெரிவித்தார்

கருத்துரையிடுக

 
Top