(வீடியோ இணைப்பு)

1

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்தில் இடம் பெற்ற 15 வது சர்வதேச அல் குர்ஆன் போட்டியில் கலந்துகொண்டஎமது நாட்டைச் சேர்ந்த ஹாபிழ் அப்துல் காதர் முஹம்மத் கனி முகம்மத் அஸ்மி அ திர்கம் 65,000  (ரூபா 1,950,000) பரிசை வென்றார்.இப்போட்டிகள் 1997 ஆம் வருடம் துவங்கப்பட்டு 15வது வருடமாக அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஆதரவில் நடைபெற்று வருகிறது.

 இந்தப் போட்டியில் 92  வீதமான புள்ளிகளை பெற்று லிபியா நாட்டை சேர்ந்த போட்டியாளர் காலித் முகம்மத் அல் கர்டோஸ் முதலாமிடத்தை பெற்று திர்கம் 250,000  பரிசை தட்டிச்சென்றார். கத்தார் நாட்டைச்சேர்ந்த அப்துல்லாஹ் ஹாமத் அபூ ஷாரிதா இரண்டாம் இடத்தையும் துருக்கி நாட்டைச்சேர்ந்த அஹமத் ஷரிகையா மூன்றாம் இடத்தையும் பெற்று முறையே திர்கம் 200,000 மற்றும் திர்கம் 150,000 பரிசை வென்றார்கள்.15 வருட அல் குர்ஆன் போட்டி வரலாற்றில் இந்த தடவை இரண்டு போட்டியாளர்கள் பார்வை குறைபாட்டுடன் கலந்துகொண்டார்கள், இதில் விசேடமாக குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் இவர்கள் இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசை இந்த போட்டியில் வென்றார்கள்.

கருத்துரையிடுக

 
Top