அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய டிவிசன்-2 பிரீமியர் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் தேசிய ரீதியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தை பாராட்டி கெளரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்முனை வர்த்தக சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
கல்முனை வர்த்தக சங்கத் தலைவர் கே. எம். சாபி ஹாதிம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வெற்றிபெற்ற கழகத்திற்கு பணப் பரிசில்கள் வழங்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட துறை வரலாற்றில் தேசிய மட்டத்தில் ஒரு விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதற்தடவையாகும்.

கருத்துரையிடுக

 
Top