கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவுக்கான விதாதா வள மத்திய பயிற்சி நிலையத்தில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த வள நிலையத்தில் இளைஞர்,யுவுதிகளுக்கான கணினிப் பயிற்சி,தையல் பயிற்சி,அலங்கார வேலைகள் என்பன இடம்பெற்று வருகின்றன.
அண்மையில் கணினிப் பயிற்சியை முடித்த 40 இளைஞர்,யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த வள நிலையம் கடந்த வியாழக்கிழமை இரவுவேளை உடைக்கப்பட்டு அங்கிருந்த கணினிகள் மற்றும் கணினிகளுக்கு பயன்படுத்தும் உதிரிப்பாகங்கள் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக வள நிலையத்துக்கு சுமார் நான்கு இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

 
Top