க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதில் அதிவிஷேட சித்திகளைப் (3ஏ) பெற்றவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வகையில் நாடளாவிய ரீதியில் 4,384 பரீட்சார்த்திகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
மேலும் பாடசாலை ரீதியாக 3908 பரீட்சார்த்திகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ள அதேவேளை, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 476 பேர் 3 ஏ பெற்றுள்ளனர்.உயிரியல் விஞ்ஞான பாடத்தில் அகில இலங்கை ரீதியாக 367 பேர் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் பாடசாலை பரீட்சார்த்திகள் 286 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 81 பேரும் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர் விரிவாக பார்க்க
கணித பாடத்தில் நாடளாவிய ரீதியில் 404 பேர் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். அவர்களில் 385 பேர் பாடசாலை மட்டத்திலும் 19 பேர் தனிப்பட்ட ரீதியிலும் 3 ஏ ஐப் பெற்றுள்ளனர். வர்த்தக பாடத்தில் அகில இலங்கை ரீதியாக 1576 பேர் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன், அவர்களில் 1496 பேர் பாடசாலை ரீதியாகவும் 80பேர் தனிப்பட்ட ரீதியாகவும் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். கலைப்பாடத்தில் நாடளாவிய ரீதியில் 2037 பேர் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் 1741 பேர் பாடசாலை ரீதியாகவும் 296 பேர் தனிப்பட்ட ரீதியாகவும் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை,பல்கலைக்கழகத்திற்கான தகுதியுடையோர் தொடர்பில் நாடளாவிய ரீதயில் ஒரு இலட்சத்து நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்றி எண்பத்தொரு பேர் பல்கலைக்கழகத்திற்கான தகுதியுடையவர்களாக உள்ளனர். அவர்களில் ஒரு இலட்சத்து இருபதாயிரத்து இருநூற்றைம்பத்தாறு பேர் பாடசாலை ரீதியாகவும் இருபத்திரண்டாயிரத்து நூற்று இருபத்தைந்து பேர் தனிப்பட்ட ரீதியாகவும் உள்ளனர். விஞ்ஞான பாடத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான தகுதியுடையவர்கள் எனும் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் இருபத்தோராயிரத்து நானூற்றைம்பது பேரும் அவர்களில் பாடசாலை மட்டத்தில் பதினைந்தாயிரத்து நானூற்று ஐம்பத்திரண்டு பேரும் தனிப்பட்ட ரீதியாக ஆறாயிரத்து ஏழுபேரும் தகுதி பெற்றுள்ளனர்.
மேலும்,கணித பாடத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கான தகுதியுடையவர்களில் நாடளாவிய ரீதியில் பன்னீராயிரத்து அறுநூற்றாறு பேர் உள்ளதுடன் அவர்களில் பாடசாலை ரீதியாக பத்தாயிரத்து இருநூற்றெண்பத்தொன்பது பேரும் தனிப்பட்ட ரீதியாக இரண்டாயிரத்து முந்நூற்றுப் பதினேழுபேரும் உள்ளனர். மேலும் வர்த்தகப் பாடத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கான தகுதி பெற்றவர்களில் நாடளாவிய ரீதியில் முப்பத்தையாயிரத்து ஐந்நூற்று எழுபத்தொரு பேரும் அவர்களில் பாடசாலை ரீதியாக முப்பத்திரண்டாயிரத்து அறுநூற்று முப்பத்தைந்து பேரும் தனிப்பட்ட ரீதியாக இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தாறு பேரும் உள்ளனர்.
கலைப்பாடத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கான தகுதியுடையவர்களாக நாடளாவிய ரீதியில் எழுபத்திரண்டாயிரத்து எழுநூற்று நாற்பத்தைந்து பேரும் அவர்களில் பாடசாலை ரீதியாக அறுபத்தோராயிரத்து எண்ணூற்றி எண்பதுபேரும், தனிப்பட்ட ரீதியாக பத்தாயிரத்து எண்ணூற்றி அறுபத்தைந்து பேரும் உள்ளனர்.இதேவேளை, அகில இலங்கை ரீதியாக க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து அறுபத்தொன்பதாயிரத்து அறுநூற்றொன்பது பேர் விண்ணப்பித்துள்ளனர்.அவர்களில் பாடசாலை ரீதியாக இரண்டு இலட்சத்து பதிந்நான்காயிரத்து அறுநூற்றிருபத்தி மூன்று பேரும், தனிப்பட்ட ரீதியாக ஐம்பத்தி நான்காயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தாறு பேரும் பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களாவார்கள்.
மூன்று பாடங்களுக்கும் நாடளாவிய ரீதியில் தோற்றிய பரீட்சார்த்திகள் இரண்டு இலட்சத்து முப்பதாயிரத்து இருநூற்றி முப்பத்தேழு போராவார்கள.அவர்களில் பாடசாலை ரீதியாக ஒரு இலட்சத்து தொண்ணூற்றி மூன்றாயிரத்து இருநூற்றி இருபது பேரும், தனிப்பட்ட ரீதியில் முப்பத்தேழாயிரத்து பதினேழு பேரும் உள்ளனர். பரீட்சைக்கு தோற்றியவர்களில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்தவர்கள் அகில இலங்கை ரீதியாக ஒரு இலட்சத்து நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்றி எண்பத்தொரு பேராவர். அவர்களில் பாடசாலை ரீதியாக ஒரு இலட்சத்து இருபதாயிரத்தி இருநூற்றி ஐம்பத்தாறு பேரும்,தனிப்பட்ட ரீதியாக இருபத்திரண்டாயிரத்து நூற்றி இருபத்தைந்து பேரும் உள்ளனர். அதேவேளை, மூன்று பாடங்களிலும் சித்தியடையாதவர்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் இருபத்தி மூவாயிரத்து நானூற்றி இருபது பேர் உள்ளனர். அவர்களில் பாடசாலை ரீதியாகப் பத்தொன்பதாயிரத்து எழுநூற்றி எண்பத்தெட்டுப்பேரும், தனிப்பட்ட ரீதியாக மூவாயிரத்து அறுநூற்றி முப்பத்திரண்டு பேரும் உள்ளனர்

கருத்துரையிடுக

 
Top