இம்முறை ஹஜ் யாத்திரைக்கு 5800 போ;

Imageஇம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான முதலாவது இலங்கை ஹஜ் குழு எதிh;வரும் 17 ஆம் திகதி பயணமாக உள்ளது.

இம்முறை இலங்கையில் இருந்து சுமார் 5800 பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காகச் செல்ல உள்ளதுடன் முதலாவது ஹஜ் குழுவில் சுமார் 300 பேர் செல்ல உள்ளதாக முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் வை. எல். எம். நவவி தெரிவித்தார.

ஹஜ் குழுத் தலைவரும் மேல் மாகாண ஆளுநருமான அலவி மௌலானா தலைமையில் முதலாவது ஹாஜிகள் குழுவை வழியனுப்பும் நிகழ்வூ இடம்பெறவூள்ளது.

இதேவேளை ஹாஜிகளின் நலன்களைக் கவனிப்பதற்காக திணைக்கள அதிகாரிகள் 4 பேரும் 6 மருத்துவர்களும் பயணமாக உள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டார்.

கடந்த முறை போன்று இம்முறை ஹஜ் பயணிகள் தொடர்பில் அறிவூறுத்தல்கள் எதுவூம் விடுக்கப்படவில்லை எனவூம் அவர் கூறினார். (எஸ்.டி.எம்.ஐ. 10.45)
 

கருத்துரையிடுக

 
Top