மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது  ஆண்டு நினைவு தினம் இன்று கல்முனையில்  பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்  தலைமையில் இடம் பெற்றது.
அஸ்ரப் அழியா பொக்கிஷம் 


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் வபாத்தாகி அல்லது கொல்லப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துள்ளது இவர் 2000 ஆம் ஆண்டில் உலங்கு வானூர்தி ஒன்றில் பயணிக்கும் போது வபாத்தானார்.
இவர் 1986.11.29 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லிம் சமூக நிறுவனத்தை ஒரு அரசியல் கட்சியாக பிரகடனம் செய்து வைத்தார்.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் வளர்ச்சி ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களின் எழுச்சியாகத்தான்  பார்க்க படுகின்றது சரணாகதி அரசியலுக்கு பதிலாக பேரம் பேசும் அரசியல் பலத்தை முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு பெற்று கொடுத்தது இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் வேறு எந்த முஸ்லிம் வாதிகளும் செய்ய தயங்கிய விடையங்களை அஷ்ரப் துணிவுடன் நடத்தியபோதும் பாராளுமன்றத்தில் அல் குர்ஆன் வசனங்களை முழங்கி இஸ்லாமிய அரசியல் தோற்றத்தை முஸ்லிம் சமூகத்தினுள் காட்ட முற்பட்ட போதும் முஸ்லிம் மக்களின் மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெற்ற ஒரு முஸ்லிம் தலைவன் என்ற அந்தஸ்தைப் எம்.எச்.எம்.அஷ்ரப் பெற்றுக்கொண்டார் விரிவாக பார்க்க
எம்.எச்.எம்.அஷ்ரப்பின் பாராளுமன்ற அரசியல் வாழ்க்கையென்பது வெறும் 10 வருடங்கள்தான் 1989 இல் பாராளுமன்ற உறுப்பினரானவர் 2000ஆம் ஆண்டு வபாத்தானார் . இந்த காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்று படுத்தி ஒரு பலமான சக்தியாக ஒன்று திரட்டினார் ஒரு இஸ்லாமிய அரசியல் இயக்கம் செய்யவேண்டியதை ஒரு முஸ்லிம் அரசியல் வாதியாக மட்டும் இருந்து சாதித்தார் முஸ்லிம்கள் தனித்துவமான ஒரு சமூகம் என்பதை அங்கீகாரம் பெறச் செய்தார்.
இவற்றுக்கு இவரின் திறமையை மட்டும் காரணமாக கூறமுடியாது முஸ்லிம்களுக்கு எதிராக உருவாகி இருந்த அந்த சந்தர்பத்தை இவர் மிகவும் சிறப்பாக துணிவுடன் பயன்படுத்தினார் என்றுதான் கூறவேண்டும் அன்றைய காலகட்டத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் ஒரு தம்மை வழிநடத்தும் தலைவன் ஒருவனுக்காக பிராத்தனை செய்துகொண்டிருந்தது  எலி வளையானாலும்  தனி வளை  வேண்டும் என்று முஸ்லிம்கள் சிந்தித்து கொண்டிருந்தனர் இவற்றை இஸ்லாமிய இயக்கங்கள் பயன்படுத்த தவறிவிட்டன இஸ்லாமிய இயக்கங்கள் பயன்படுதியிருந்தால் பல முன்னேற்றங்களை இன்று கண்டிருக்கும் இந்த  சந்தர்பத்தை அஷ்ரப் மிகவும் துணிவுடனும் திறமையுடனும் பயன்படுத்திக் கொண்டார் எந்த அரசியல்வாதி துணிவுடன், திறமமையுடனும் முஸ்லிம்களின் உரிமைகளையும் ,தேவைகளையும் ,விருப்பங்களையும் பெற்றுக்கொள்ள போராட முற்பட்டாலும் அவர்கள் அடையும் நிலையைத்தான் அஷ்ரப் அடைந்து கொண்டார்
1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த அஷ்ரப்பைப் பார்த்து பெரும்பான்மை கட்சி முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் ‘இந்த சபைக்குள் நுழைந்த மிக மோசமான மிருகம் நீதான்’ என்று திட்டியுள்ளார்
அஷ்ரப்பை நேசிக்காத அரசியல்வாதிகளை முஸ்லிம் சமூகம் நேசிக்கத் தயாராக இல்லை என்பதை கண்டுகொண்ட பல முஸ்லிம் பெரும்பான்மை கட்சி அரசியல்வாதிகள் பின்னர் அஷ்ரப்பை நேசிப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இவர் தலைமை தாங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றும் பல பிளவுகள் மத்தியிலும் வெற்றிநடை போடுகின்றது இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை அங்கீகாரத்தை பெற்றுக்கொண்ட கட்சியாக இன்று வளம் வருகின்றது என்பது சிறப்பானது ஆனால் முஸ்லிம் சமுகத்தின் உரிமைகளை பெற்றுள்ளதா? என்பது விவாதிக்கப்படும் விடயமாக இருக்க இந்த கட்சி இஸ்லாமிய கோட்பாடுகளை கொண்ட கட்சியாக இல்லை என்பது இன்று பெரும் விமர்சனமாக உருபெற்றுள்ளது
ஓ மரணித்த வீரனே உன் ஆயுதங்களை எனக்கு தா உன் சீருடைகளை எனக்கு தா உன் பாதணிகளை எனக்கு தா ஓ மரணித்த வீரனே உனக்கு அல்லாஹ்  மன்னிப்பும் சுவர்க்கமும் தந்தருள்வானாக
(நன்றி ஷாமில்முஹம்மது)
(யு .எம்.இஸ்ஹாக்)

ஹரீஸ் எம்.பீ  தலைமையில் இடம்பெற்ற கதமுல் குரான்
 
    
 
 


Honourable
M. H. M. Ashraff MP

Leader of the Sri Lanka Muslim Congress


Born October 23, 1948
Sammanthurai, Ceylon
Died September 16, 2000 (aged 51)
Aranayake, Sri Lanka
Political party Sri Lanka Muslim Congress
Spouse(s) Ferial Ismail Ashraff
Alma mater Colombo Law College
University of Colombo
Profession Lawyer
Religion Islam

1. Early life

Ashraff was born on 23 October 1948 in the south-eastern town of Sammanthurai in present day Ampara District. He was the grandson of M. S. Kariapper, a leading Muslim politician. He studied at the Al Azhar School, Fathima School and Kalmunai Wesley High School (1961-1966). He studied at the Colombo Law College between 1969 and 1974, graduating with first class honours. Afterwards he practiced law in Kalmunai and Batticaloa, specialising in criminal law. Ashraff received a Bachelor's degree and a Master's degree (1995) in law from the University of Colombo later. He was appointed President's Counsel in 1997.
Ashraff married Ferial in 1977. They had one son: Aman Ashraff.

2. Sri Lanka Muslim Congress

In 1977 Ashraff and others formed the Muslim United Liberation Front (MULF) political party to represent Sri Lanka's Moors (Muslims). The MULF formed an alliance with the Tamil United Liberation Front (TULF) to contest the 1977 parliamentary election under the TULF ticket. The MULF fielded three candidates but all performed badly. The MULF subsequently merged with the Sri Lanka Freedom Party against Ashraff's wishes.
In September 1981 Ashraff and other leading Muslim politicians established the Sri Lanka Muslim Congress (SLMC) at Kattankudy. Ashraff was the SLMC's president. The SLMC was formally inaugurated as a political party in November 1986 at a meeting in Colombo, Ashraff being its leader.

3. Political career

Ashraff was elected to Parliament at the 1989 parliamentary election to represent Ampara District. He was re-elected at the 1994 parliamentary election. The SLMC joined the new People's Alliance (PA) government in 1994 and Ashraff was appointed Minister of Ports Development, Rehabilitation & Reconstruction. By 2000 relations between the SLMC and PA had become strained and just before Ashraff died he had decided to sever all ties with the PA. [1]

4. Death

Ashraff was killed on 16 September 2000 when Sri Lanka Air Force MI-17 helicopter he was traveling in crashed into the Urakanda mountain range near Aranayake, Kegalle District under mysterious circumstances. [2] [3] 14 others in the helicopter were also killed. Ashraff was buried the same day at Colombo's Jawatta Muslim burial ground.
The government immediately ordered an inquiry into the crash and in January 2001 President Kumaratunga appointed a Presidential Commission to inquire into the crash. [4] [5] However, neither found any conclusive evidence for the crash's cause. [6]

5. Writer

Ashraff was a writer of short stories, poems and newspaper/magazine articles. He had a book of poems called Naan Enum Nee published. [7] He worked as a part-time journalist on the Thinapathy daily newspaper whilst studying at Colombo Law College. Later he published a left-wing magazine called Samathuvam (Equality).

6. References

  1. "Final act". Sunday Times (Sri Lanka). 17 September 2000. http://sundaytimes.lk/000917/frontm.html.
  2. "Key minister killed in Sri Lanka crash". BBC News. 16 September 2000. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/927370.stm.
  3. "Ashraff dies in mystery crash". Sunday Times (Sri Lanka). 17 September 2000. http://sundaytimes.lk/000917/frontm.html.
  4. "Helicopter crash probe launched". BBC News. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/929211.stm. Retrieved 17 September 2000.
  5. "Sri Lanka: Significant Political News Items in 2001". International Centre for Ethnic Studies. http://www.ices.lk/sl_database/political_events/political2001.shtml.
  6. "SLMC, NUA remember late leader Ashraff". TamilNet. 16 September 2003. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=9890.
  7. "Ashraff 'talks' with Lord Buddha". Sunday Times (Sri Lanka). 28 November 1999. http://sundaytimes.lk/991128/news3.html.
The article "M. H. M. Ashraff" is part of the Wikipedia encyclopedia. It is licensed under the terms of the Creative Commons Attribution/Share-Alike License.
modified: 2010-06-19 04:18:40

கருத்துரையிடுக

 
Top