அரச முகாமைத்துவ சேவையில் ஆறாயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்பட இருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான நேர்முகப் பரீட்சை நாளை ஆரம்பமாக இருப்பதாக அரச இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் திருமதி கே.வி.பி.எம்.ஜி.கமகே தெரிவித்துள்ளார்.
போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நேர்முகப்பரீட்சைக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நேர்முகப் பரீட்சை அரச நிர்வாக அமைச்சில் எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறும்.
நேர்முகப் பரீட்சையின் பின்னர், இவர்கள் சேவையில் துரிதமாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அரச இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் திருமதி கே.வி.பி.எம்.ஜி.கமகே குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

 
Top