பேஸ்புக் உட்பட அனைத்து சமூகவலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை எதிர்வரும் வௌ்ளி்க்கிழமை (16) நீக்கப்படும் என்று தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் குறித்த தடை நீக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் நிறுவன பிரதிநிதிகள் எதிர்வரும் வியாழனன்று இலங்கையில் நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்துகொண்டு குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவார்கள் என்றும் தெரிவிக்ப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை காரணமாக சமூகவலைத்தளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டன.

கருத்துரையிடுக

 
Top