கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று மாலை ஆறு மணி தொடக்கம் ஊரடங்குச் சட்டம் அமுலாகிறது.

நாளைக் காலை ஆறு மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கண்டியில் நிகழ்ந்த அசம்பாவிதங்களால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகள், வர்த்தக நிலையங்கள் அடங்களாக 45 உடமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 4 வணக்கஸ்தலங்களும், 11 வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இங்கு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட இராணுவ வீரர்கள் இரண்டாயிரத்து 500 பேரை அனுப்பியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித்தபத்து அறிவித்தார்.


இனங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பிஇ வதந்திகளை கட்டவிழ்த்து மோசமான நிலைமையை ஏற்படுத்த வழிவகுத்ததாக சந்தேகிக்கப்படும் 10 நபர்கள் கைதானார்கள். இவர்களில் பிரதான சந்தேக நபரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

 
Top