இலங்கை பெண்கள் சாரணிய சங்கத்தினால் கல்முனை வலயக்  கல்வி அலுவலகத்தை  சேர்ந்த இரண்டு பெண் அதிகாரிகளுக்கு  மாவட்ட இணைப்பாளர் பதவியும் கல்முனை வலய ஆணையாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

கல்முனை கல்வி வலயத்தில் நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரியாக பணியாற்றும் திருமதி ஜிஹானா அலிப்  மாவட்ட சாரணிய  இணைப்பாளராகவும் , கல்முனை வலயத்தில் ஆசிரிய ஆலோசகராக பணியாற்றும்  திருமதி ரீ.கே.பத்திரண  வலய  சாரணிய ஆணையாளராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர் .

இவர்களுக்கான நியமனக் கடிதத்தினை  கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் வைத்து  கல்முனை வலயக்  கல்விப்   பணிப்பாளர் எம்.எஸ். ஜலீல்  நேற்று  வழங்கி வைத்தார் . 

கருத்துரையிடுக

 
Top