கண்டிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தற்போது விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அமைச்சர்களுடன் கண்டியைச் சென்றடைந்துள்ள ஜனாதிபதி முக்கிய கலந்துரையாடலொன்றிலும் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த கலந்துரையாடலில் உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகளும், சர்வ மதத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பிரதேசங்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதுடன், கண்டியில் பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு ஜனாதிபதி சிறிசேன செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

 
Top