இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை மாநகரத்தின் கிழக்கே பரந்து விரிந்து காணப்படும் வங்கக் கடலோரம் அமந்துள்ள கல்முனை கடற்கரைப் பள்ளி வாசல் 196 வது கொடியேற்ற விழா நேற்று (16) ஆரம்பமானது. 

சங்கை மிகு சாஹூல் ஹமீத் ஒலியுல்ளா அவர்களின் நினைவாக ஏழு தட்டு மினராவில் கொடியேற்றப்பட்டு 12 நாட்கள் மார்க்க சொற்பொழிவுகள், மௌலீது மஜ்லிஸ் பக்கீர் ஜமாஅத்தாரின் றாதிபு என்பன இடம் பெற்று இறுதி நாளான அடுத்த மாதம் 28ஆம் திகதியன்று மாபெரும் அன்னதானம் கந்தூரி வழங்கும் நிகழ்வும்  அங்கு நடை பெறவுள்ளது. 

வருடாவருடம் ஜமாஅதுல் ஆகிர் முதல் பிறையுடன் ஆரம்பமாகும் இக்கொடியேற்ற விழாவானது கல்முனைகுடி முகையதீன் ஜும்மாப்பள்ளி பள்ளிவாசலில் இருந்து உலமாக்கள், கல்விமான்கள் புடைசூழ பக்கீர் ஜமாஅத்தாரின் பைத் ஓசை முழங்க ஊர்வலமாக கொடி எடுத்துவரப்பட்டு நேற்று மாலை மினராவில் ஏற்றி வைக்கப்பட்டது. 

இவ்விழாவானது கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லீம்கள் மட்டுமன்றி நாட்டிலுள்ள அனைத்து இனத்தவர்களும் இன மத பேதமின்றி கலந்து கொள்ளும் ஒரு புனித நிகழ்வாக கருதப்படுகின்றது. 

நேற்று இடம் பெற்ற இந்தக் கொடியேற்ற நிகழ்வைக் கண்டு கழிக்க நாட்டின் நாலா புறத்திலும் இருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் பள்ளிவாசல் வளாகத்தில் திரண்டிருந்தனர். கருத்துரையிடுக

 
Top