உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கை எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறும். அத்துடன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 18ம் திகதி ஆரம்பமாகும். தேர்தல் சுதந்திரமாகவும், நீதியாகவும் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு . பொலிசாரும் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக பொலிசார் செயற்படுகின்றனர். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களின் வேட்பாளர்கள் தற்போது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கட்சிகளின் பங்களிப்புடன் முக்கிய கூட்டங்கள் நடைபெறுகின்றன. வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களை தெளிவுபடுத்தி வருகின்றனர்.

முடிந்தளவு தேர்தல் விதிமுறைகளை மீறப்படாத வகையில் தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அரசாங்க சொத்துக்கள் எந்த வகையிலும் இந்தத் தேர்தலுக்காகப் பயன்படுத்தக்கூடாது என்றும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top