வடக்கு கிழக்கு கரையோர கடற்பிரதேசத்தில் நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்று இடர்முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
தற்போது எதிர்பார்க்கப்படும் சீரற்ற காலநிலையின் காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவது பாதுகாப்பற்றது என்று  மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சீரற்ற காலநிலையை கரையோரப்பிரதேசத்திலுள்ள மக்களும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோரும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த தகவல்களை பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் ஊடாக சம்பந்தப்பட்ட கரையோர மற்றும் கடற்றொழிலிலாளர் சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக வடக்கு இடர்முகாமைத்துவ அதிகாரி ஒருவர் எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.

முல்லைத்தீவு பிரதேசத்தில் கடற்றொழில் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கும் இவ்வாறான   அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

கடற்றொழில் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் நாளை முதல் மறு அறிவித்தல் வரை கடல் நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top