கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை-01 வைத்தியசாலை குறுக்கு வீதி கல்முனை நீதி மன்றம் ,தொலைத் தொடர்பு திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கல்முனை பொதுச் சந்தைக்கு  பொது மக்கள் பயன்படுத்தும் குறுக்கு வழி வீதியாகும் .
இவ் வீதியில் வசிக்கும் மக்கள் போக்குவரத்து செய்வதில் கஸ்டத்தையும் டெங்கு ஆபத்தையும் எதிர் நோக்கியவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த வீதியானது கல்முனை மாநகர சபையினால் பராமரிக்கப்படுகின்ற போதிலும் பல வருடமாக மாநகர சபை கவனிக்காமல் விட்டதனால் குன்றும் குழியுமாக சேதமடைந்துள்ளது. இதனால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர்.

மேலும் மழைகாலம் ஆரம்பித்துள்ளதனால் இந்த வீதியின் அருகாமையில் அமைந்துள்ள வடிகான் நீண்டகாலமாக துப்புரவு  செய்யப்படாமயால் நீர் தேங்கி காணப்படுகின்றது. இதனால் இப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு டெங்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

வடிகான் சீர் இன்மையால் வெற்றுக் காணிகளில் நீர் தேங்கி காணப்படுவதுடன் குப்பை கூழங்களும் கொட்டப்பட்டு வருகின்றன இதனால் நுளம்பு பெருக்கம் அதிகரிக்க வாய்ப்பாக உள்ளது.

எனவே இந்த விடயத்தை கல்முனை மாநகர சபை கவனத்திலெடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


கருத்துரையிடுக

 
Top