அனைத்து அரச மற்றும் அரசாங்கம் அங்கீகரித்துள்ள தனியார் பாடசாலைகளுக்கான இவ்வருடத்திற்கான மூன்றாம் தவணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08) நிறைவடைவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அந்த வகையில் அனைத்தும் சிங்கள, தமிழ், முஸ்லிம் அரச, தனியார் பாடசாலைகளுக்கு, எதிர்வரும் டிசம்பர் 08 ஆம் திகதி மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகள், எதிர்வரும் ஜனவரி 02 ஆம் திகதி முதலாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top