கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட முஸ்லீம் கோட்டத்தில்  இவ்வாண்டு தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப்  பெற்று சித்தியடைந்த 131 மாணவர்களையும்  அவர்களுக்கு கற்பித்த 34 ஆசிரியர்களையும்  மற்றும் முஸ்லீம் கோட்டதுக்குட்பட்ட  15 அதிபர்களையும் 05 கல்வி அதிகாரிகளையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு  நாளை ஞாயிற்றுக் கிழமை  மருதமுனை   அல் -மன்னார் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடை பெறவுள்ளது.

கல்முனை முஸ்லீம் பிரிவு கோட்டக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இப்பாராட்டு விழா நிகழ்வு கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.சக்காப் தலைமையில் நடை பெறவுள்ளது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம்  பிரதம அதிதியாகவும் ,கல்முனை வலயக்கல்விப்  பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல் கெளரவ அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் சிறப்பு அதிதிகளாக பிரதிக் கல்விப்  பணிப்பாளர்களான வீ.மயில்வாகனம்,ஏ.எல்.எம்.முக்தார் ,எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா ,எஸ்.எல்.ஏ.றகீம் ,பீ.எம்.வை.அரபாத் முகைதீன் , மற்றும் வலையாக கல்வி அலுவலக கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
​மேலும் பல கல்விமான்களும்,தனவந்தர்களும்  இந்நிகழ்வில் விசேட அதிதிகளாகவும்  கெளரவிப்பாளர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.​

கருத்துரையிடுக

 
Top