'ஒகி' சூறாவளியின் அழுத்தம் இலங்கையைவிட்டு இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இன்றும் நாளையும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையை எதிர்பார்க்க முடியும் என்று எதிர்வு கூறியுள்ளது. 
 
நாட்டைச் சுற்றியுள்ள கடற்பிரதேசத்திலும் நாட்டிலும் தொடர்ந்து கடும் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் தென்மாகாண பிரதேசங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் கடற்தொழிலாளர்கள் இன்றையத் தினம் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். 
 
இதேவேளை இலங்கையிலிருந்து நகர்ந்து செல்லும் 'ஒகி' சூறாவளியின் தாக்கம் இந்தியாவை பாதித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் கடும் மழைப் பெய்து வருகிறது.
 
வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. கடுங்காற்றின் காரணமாக மரங்கள் பல முறிந்துள்ளன. இந்த சம்பவங்களினால் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இருநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமற் போன மீனவர்களைக் கண்டுப்பிடிப்பதில் ஐந்து கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நிவாரண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

 
Top