முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் லங்கா சதொச பணிப்பாளருமான சி.எம்.முபீத் மற்றும் நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேசன் தலைவர் சி.எம். ஹலீம் ஆகியோரின்  கோரிக்கைக்கு அமைய வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஸாத் பதியுதீன் சிபாரிசில் 38வருடமாக 1C தரத்தில் இருந்த நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயம்  1AB  தரத்துக்கு உயர்த்தப்பட்டு உயர்தர விஞ்ஞான ,கணித ,தொழில் நுட்ப வகுப்புக்களுக்கான அனுமதி வழங்கப்படுள்ளதுடன் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலயமாக பெயர் மாற்றமும் பெற்றுள்ளது .

இவ்வருடம் தரம் ஐந்து புலமைப்பரிசு பரீட் சையில் சித்தி பெற்ற சாதனை மாணவர்களை பாராட்டி  கெளரவிக்கும் நிகழ்வும் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய  தரம் உயர்வு  அனுமதி கடிதம் கையளிக்கும் நிகழ்வும் இன்று  கல்லூரி ஆராதனை மண்டபத்தில் நடை பெற்றது.

கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம் பிரதம அதிதியாகவும் ,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் ,பிரதிக் கல்விப்  பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.ரஹீம் ,கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப்,   நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேசன் தலைவர் சி.எம். ஹலீம் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சித்தியடைந்த மாணவர்களையும் ,கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி  கெளரவித்ததுடன் நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய தரமுயர்வு அனுமதிக்க கடிதத்தையும் கையளித்தனர்.
நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மத்திய மகா வித்தியாலய தரமுயர்வு காரண கர்த்தாக்களாக இருந்த கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம் ,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத்,நற்பிட்டிமுனை அல் -கரீம் பவுண்டேசன் தலைவர் சி.எம். ஹலீம் ஆகியோரால் பாராட்டு வழங்கி கெளரவம் வழங்கப் பட்டது .
நிகழ்வில் லாபீர் வித்தியாலய அதிபர் பஸீர்  உட்பட கல்லூரி பிரதி மற்றும் உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன் மாணவர்களின் காலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.

கருத்துரையிடுக

 
Top