சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11அதிகரித்துள்ளது. 
மாத்தறை கம்புறுப்பிட்டிய பலோப்பிட்டிய பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு விழுந்தமையினால் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த அவரது மனைவி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீரற்ற காலநிலையினால் 55 பேர் காயமடைந்துள்ளனர். 5 பேர் காணாமல்போயுள்ளனர;. 
  
14 மாவட்டங்களில் 18 ஆயிரத்து 752 குடும்பங்களைச் சேர்ந்த 61 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 
  
சீரற்ற காலநிலை காரணமாக 30 படகுகள் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது

கருத்துரையிடுக

 
Top