பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பில் நாளை கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹசான் இதானகே எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இந்த வேளையில் - பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று குரல் எழுப்பினர்.

இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றமுடியாது என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசேகர – பழையமுறைப்படி தேர்தல் நடத்தப்படவேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன - கூடிய விரைவில் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

சபாநாயகர் - என்னால் தேர்தல் நடத்த முடியாது. இது தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடத்தி எனது பொறுப்பை நிறைவேற்றுவேன்

கருத்துரையிடுக

 
Top