(பி.எம்.எம்.ஏ.காதர்)
நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தையொட்டி மபாஹிர் மசூர்மொலானாவின் நெறியாழ்கையில் தயாரித்து வழங்கும்“பொம்பளங்க வேல”இஸ்லாமிய நாடகம் நாளை வெள்ளிக்கிழமை (01-12-2017)மாலை பி.ப.4.35 மணிக்கு இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபன நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பாக உள்ளது.
இறக்காமத்தைச் சேர்ந்த சிறந்த நாடக எழுத்தாளரும் நடிகரும், கலைஞருமான திருமதி பர்ஸானா றியாஸ் இந்த நாடகத்திற்கான கதையை எழுதியுள்ளார். சமூகத்தில் சீர்கெட்டிருக்கும் பெண்களின் அறியாமையினால் இடம் பெறும் தீய சம்பவங்களை கருப்பொருளாகக்  கொண்டே இக் கதை எழுதப்பட்டுள்ளது.
இந்த நாடகத்தில் பல்துறைக் கலைஞரான திருமதி நெய் றஹீம் சஹீட், பிறை எப்.எம்.அறிவிப்பாளர் எஸ்.றபீக், நாடகத்தின் கதாசிரியர் பர்ஸானா றியாஸ், நடிகர் அஸ்வான் சக்காப் மௌலானா, முகம்மட் றியாஸ், யாழ் பரீத் ஜாபிர், விஜயா துரைசாமி, பரீட் பதீர், ஆகியோர் நடித்துள்ளனர்.   
கருத்துரையிடுக

 
Top