அண்மைக்காலமாக கல்முனை வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பில்  கணக்காய்வு  ஐய்ய  வினாக்கள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில்  அதனை எவ்வாறு தவிர்ப்பது ,அல்லது குறைப்பது எனவும்  ஐய்ய   வினாக்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது  என்பது தொடர்பாகவும்  கல்முனை வலய அதிபர்களுக்கு  விழிப்பூட்டும் கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம்  இன்று (23) வலயக்  கல்வி அலுவலக மண்டபத்தில் நடை பெற்றது.

கல்முனை  வலயக்  கல்வி அலுவலக கணக்காளர்  றிஸ்வி யஹ்சரின்  நெறிப்படுத்தலில்  வலயக்கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில்  வலயக் கல்வி அலுவலக  மண்டபத்தில் இன்று முழு நாள் இடம் பெற்ற  செயமர்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் ,கிழக்கு மாகாண கணக்காய்வாளர் நாயகம் எச்.எம்.எம்.ரஷீட் ,பிரதம உள்ளக கணக்காய்வாளர் உட்பட மாகாண கணக்காய்வு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் .

அதிபர்கள் ,பிரதி அதிபர்கள் ,பாடசாலை அபிவிருத்தி சங்கப்  பொருளாளர் என 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த விழிப்பூட்டல் செயலமர்வில்  பல்வேறுபட்ட ஐய்ய   வினாக்களுக்கான  விளக்கங்கள் வழங்கப் பட்டதுடன்  பாடசாலைகளில்  காணப்படும்  பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பலவும் எட்டப்பட்டன .கருத்துரையிடுக

 
Top