கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் நாளை முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கலாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் மேக மூட்டம் நிலவும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. 
திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்நறுவை, அம்பாறை மாவட்டங்களில் 50 மில்லிமீற்றர்களை தாண்டிய மழைவீழ்ச்சி பதிவகலாம் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யலாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

 
Top