உள்ளூராட்சிச் ச​பை தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கு தமது பெயரை பதிவு செய்து கொள்வதற்கு மக்கள் அக்கறை செலுத்துவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலேயே வாக்காளர் இடாப்பு குறித்து மக்கள் அதிகளவில் சிந்திப்பதில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அரசியல் நிலை, அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையின்மை போன்ற காரணங்களால் இந்த நிலை உருவாகியிருக்கக் கூடும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்

Post a Comment

 
Top