மட்டக்குளி, ஜுபிலி மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
 
இவ்வாறு மரணடைந்தவர் மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான இசுறு என அழைக்கப்படும் சுபயப்பு கங்கானம்லாகே கயான் ஜீவன்த என்பவராவார்.
 
இன்று (05) காலை மட்டக்குளிய ஜுபிலி வீதியில் தனது குடும்பத்துடன் முச்சக்கரவண்டியை செலுத்திக் கொண்டிருந்த நபர் மீது, மோட்டார்சைக்களில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
இச்சம்பவத்தில் பாரிய காயத்திற்குள்ளான முச்சக்கர வண்டியின் சாரதி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மரணடைந்துள்ளார்.
 
இதன்போது, குறித்த முச்சக்கரவண்டியில் அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் பயணித்துள்ளதோடு, அவர்களுக்கு எவ்வித  பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
சடலம், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
கொலைக்கான காரணம், இது வரை அறியப்படாத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் மட்டக்குளி பொலிசார் மற்றும் விசேட பொலிஸ் குழுவொன்றும் ஈடுபட்டுள்ளது. 

Post a Comment

 
Top