இரக்கமுள்ள இறைவன்
எமக்கு அனுப்பிவைத்த
அருட்கொடையை சுமந்து
வந்து  வழங்கி விட்டு

விருப்பமின்றி எம்மை விட்டும் விடைபெறும் இப்புனித ரமழானின் அருள் நிறைந்த இம்மாதத்தின் நிறைவில்

கண்ணெட்டும் தூரத்து
வான்தொட்ட நூல்இளை ஒளிக் கீறலாய் ஷவ்வால் ஏந்தி வந்து இளம் பிறை
தந்த  நோன்புப்
பெருநாளான இன் நன்னாளை

வைகறைவிடியலில் விழித்தெழுந்து கடற்கரை 
நீள் மணல்பரப்பிலும்
மஜ்லிஸ்களிலும் ஒன்றிணைந்த அல்லாஹூ அக்பர் எனும் தக்பீரின் ஓசையுடன்

தொழுகையோடு தொடர்ந்து
ஈத் முபாறக் எனும் வாழ்த்தொலிகளுடன்
பரஸ்பரம் அன்போடு பரிமாறி
கொண்டாடித் திளைத்திருக்கும்

அகிலத்தின் இசுலாமிய
உறவுகள் மற்றும் 
என் முகநூல்

நண்பர்கள் அனைவருக்கும் 
ஈகைத்திரு நாளின் எனதினிய
நல் வாழ்த்துகள்

மருதூர் மெளஜுன்

Zim,mazhoth

Post a Comment

 
Top